புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!
புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்! Vikatan Correspondent புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்! புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்! பிரீமியம் ஸ்டோரி உ ணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது.நாம் உண்ணும் உணவே நம் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை நம் வசமாக்காலாம். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய். நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது. ‘சில உணவுகளுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு’ என்கின்றன ஆய்வுகள். புற்றுநோயைத் தடுக்கும் 30 உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம். மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள், முதன்மையானது. இதில் உள்ள பாலிஃபீனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. குர்க்குமின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. பூண்டு: பூண்டில் உள்ள கந்தகம் (Sulfur) உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ப...